Thursday, April 25, 2024

வீடியோ கால் மூலம் “பேபி டெலிவரி” – கர்நாடக பெண்கள் அசத்தல்!!

Must Read

தமிழ் படம் ” நண்பன்” பட பாணியில் வீடியோ கால் மூலம் பெண் மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்து, குழந்தை பிறக்க வழிவகை செய்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று உள்ளது.

பிரசவ வலி:

வாசவி என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹனகல் நகர் கிட்டூர் சென்னம்மா தெருவில் வசித்து வந்துள்ளார். தனது கடைசி மாத கர்ப்பகாலத்தில் இருந்துள்ளார் வாசவி. அவருக்கு இது இரண்டாவது குழந்தை.

இப்படியாக இருக்கையில், இவருக்கு கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் அழைத்து பார்த்து உள்ளனர், ஆனால் அவர்களால் மருத்துவமனை கொரோனாவால் மூடப்பட்டு இருந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

பெண் மருத்துவரின் உதவி:

இதற்கிடையில் வாசவி பிரசவ வலியால் துடித்து உள்ளார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவ முன்வந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாசவி வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் ஜோதி என்ற மென்பொறியாளருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

பசியால் மாதத்திற்கு 10 ஆயிரம் குழந்தைகள் இறப்பு – அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!!

video-call-child-delivery
video-call-child-delivery

அவர் உடனடியாக தனது உறவினர் ஒருவருக்கு அழைத்து உள்ளார், அவர் பிரியங்கா என்று பெண் மருத்துவர், அவர் தனது முதுகலை மருத்துவ படிப்பை படித்துக்கொண்டு உள்ளார்.

வீடியோ கால் பிரசவம்:

அவசர சூழ்நிலையால் வீடியோ கால் மூலமாக பிரசவம் பார்க்க தான் உதவி புரிய தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார், முதலில் எல்லாரும் தயக்கம் தெரிவித்து உள்ளனர், பின்பு களத்தில் இருங்க தயாராகி பிரியங்கா சொன்ன அறிவுரைகளை பின்பற்றி அழகான ஆண்குழந்தையை பிரசவம் பார்த்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

boy baby delivered
boy baby delivered

இதனால், அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

மருத்துவர் கருத்து:

இது குறித்து பிரியங்கா கூறுகையில் ” வாசவி ஏற்கனவே முதல் குழந்தையை சிசேரியன் மூலம் பெற்று இருந்ததால், கொஞ்சம் சிக்கல் இருந்தது ஆனால், அந்த பகுதி பெண்கள் நான் சொன்னவற்றை சரியாக பின்பற்றினர், அதனால் தான் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்து உள்ளார். வாசவி குடும்பத்தினர் உதவி புரிந்த மருத்துவர் மற்றும் அக்கம் பக்கத்துக்கு பெண்களுக்கு மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -