பிளஸ் 2 மாணவர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு…, வெளியான முக்கிய தகவல்!!

0
பிளஸ் 2 மாணவர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு..., வெளியான முக்கிய தகவல்!!
பிளஸ் 2 மாணவர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு..., வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்த முடிவுகள் 94.03% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், பிளஸ் 2 வில் உதகை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்ற கணித தேர்வின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுத 5 ஆசிரியர்கள் உதவி உள்ளனர். இதனால், இந்த தேர்வு நடைபெற்ற ஹால் நம்பர் 3 மற்றும் 4 ல் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் விடைத்தாள் மட்டும் சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

ஐந்தே மாதத்தில் இத்தனை சதம்மா?? சுப்மன் கில்லின் அதிர வைத்த சாதனைகள் இதோ!!

மாணவர்கள் காப்பி அடித்த விவகாரத்தில் ஈடுபட்ட 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இந்த 34 மாணவர்களில் 32 மாணவர்களுக்கான தேர்வு முடிவை மட்டும் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதில், 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 2 மாணவர்களின் தேர்வு முடிவு குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here