பிளஸ்-2 மாணவ-மாணவிகளே தயாராகுங்க.., HCL நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு – இந்த தேதியில் தேர்வு!!!

0
பிளஸ்-2 மாணவ-மாணவிகளே தயாராகுங்க.., HCL நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு - இந்த தேதியில் தேர்வு!!!
பிளஸ்-2 மாணவ-மாணவிகளே தயாராகுங்க.., HCL நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு - இந்த தேதியில் தேர்வு!!!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 க்கான முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் மாநில முழுவதும் உள்ள மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது, 94.03 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில், மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் பயிற்சியுடன் பணி வாய்ப்பு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கணிதம், வணிக கணிதத்தில் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு உயர்கல்வி மற்றும் எச்.சி.எல். பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அப்படி 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் https://forms.office.com/r/ZbCFbsMxGe என்ற லிங்கை பயன்படுத்தி தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும். மேலும் வருகிற 19ம் தேதி அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, 20ம் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 21ம் தேதி காங்கேயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 22ம் தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.எம். மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு…, வெளியான முக்கிய தகவல்!!

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனாலிஸ்ட், டிசைன் என்ஜினீயர், டேட்டா இன்ஜினியர், சாப்ட்வேர் டெவலப்பர், சப்போர்ட் அண்ட் புரோசெஸ் அசோசியேட் ஆகிய பணி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு பயிற்சியின்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதே போல் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வரை பெற முடியும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here