புரோ கபடி லீக்: நம்பர் 1 அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்…, வெற்றி பெற போவது யார்??

0
புரோ கபடி லீக்: நம்பர் 1 அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்..., வெற்றி பெற போவது யார்??
புரோ கபடி லீக்: நம்பர் 1 அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்..., வெற்றி பெற போவது யார்??

புரோ கபடி லீக் போட்டிகளில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து தபாங் டெல்லி அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறி உள்ளது. இன்று தமிழ் தலைவாஸ் அணி நம்பர் 1 அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

புரோ கபடி லீக்:

புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசனின் 2 வது சுற்று போட்டிகள் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து UP யோத்தா அணி மோதியது. இதில், UP யோத்தாவின் ரோஹித் 8 ரைடுகள் சென்று 16 புள்ளிகளை எடுத்து அசத்தி இருந்தார். இவரை தொடர்ந்து, பெங்கால் வாரியர்ஸின் மனிந்தர் சிங் 15 ரைடுகளில் 18 புள்ளிகளை எடுத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடிய நிலையில், போட்டியானது 41-41 என சமநிலையில் முடிந்தது. இதே போன்று, மற்றொரு ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து தபாங் டெல்லி அணி போட்டியிட்டது. இந்த போட்டியில், தபாங் டெல்லி அணியானது 40-33 என்ற புள்ளி வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதில், தபாங் டெல்லி வெற்றி பெற்றதன் மூலம், இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் தலா 6ல் வெற்றி மற்றும் தோல்வி அடைந்து 35 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த லீக்கில் இன்று தமிழ் தலைவாஸ் அணியானது முதலிடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் தற்போது உள்ள 6 வது இடத்தில் இருந்து முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here