புயலின் தாக்கத்தால் உருக்குலைந்த நாடு – இதுவரை 208 பேர் பலியாகிய சோகம்!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள ராய் புயலால்,போஹல் மாகாணம் முழுவதும் சின்னாபின்னமாகி, இதுவரை 208 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ராய் புயல் :

பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பிலிப்பைன்ஸை ஆண்டுதோறும் 20 க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்குவது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த ஆண்டின் இறுதியில், போஹல் மாகாணத்தை தாக்கிய ராய் புயலால் அந்த மாகாணமே உருக்குலைந்து காணப்படுகிறது. மணிக்கு 121 கி.மீ. தொடங்கி 168 கி.மீ. வரை சுழன்றடித்த சூறாவளி காற்று காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதுவரை 208 நபர்கள் இந்த பேரிடரால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் ஆளுநர் ஆர்தூர் யாப் பேரிடர் பணிகளை,ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here