சமூக வலைத்தளத்தில் கலக்கும் தந்தை பெரியார் – முதல்வரின் முக்கிய அறிவிப்பால் ட்விட்டரில் ட்ரெண்டிங்!!

0

தந்தை பெரியார் பிறந்த நாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து இவரது புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டிங்:

“ஈரோட்டு சிங்கம், பகுத்தறிவின் பகலவன், வைக்கம் வீரர், வெண்தாடி வேங்கை” என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  இந்திய விடுதலைப் போரிலும், சாதி, மத மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் மாற்றத்திலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் இவர்.

இத்தகைய பெருமைகளை கொண்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.  தற்போது, இதன் தலைவராக கி. வீரமணி அவர்கள் இருப்பது குறிப்பிடத் தகுந்தது.  இவர், மேலும் தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் பிறையாக பெரியார் பார்க்கப்படுகிறார். இந்த கட்சியை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் முன்னோடியாகவும் பார்க்கப்படுகிறார்.

இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இவரது பிறந்த நாள் இனி வரும் காலங்களில் சமூக நீதி நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து, இவரது புகைப்படங்கள் #பெரியார், #SocialJusticeDay, #Periyar என்ற பெயரில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here