கிழிஞ்ச துணி.., கெட்டுப்போன சாப்பாடு…, அவமானத்தால் சாக பார்த்த “பேரழகன்” பட சினேகா.., இவங்களுக்கு இப்படியொரு சோகமா?

0
கிழிஞ்ச துணி.., கெட்டுப்போன சாப்பாடு..., அவமானத்தால் சாக பார்த்த
கிழிஞ்ச துணி.., கெட்டுப்போன சாப்பாடு..., அவமானத்தால் சாக பார்த்த "பேரழகன்" பட சினேகா.., இவங்களுக்கு இப்படியொரு சோகமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பேரழகன். இப்படத்தில் சூர்யா ஒரு வீட்டில் பெண் பார்க்க செல்லும் காட்சியில் உயரம் கம்மியான பெண்ணாக சினேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானவர் தான் நடிகை கற்பகம். இவர் இதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் பேரழகன் திரைப்படம் தான் அவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையை குறித்து பேசியுள்ளார். அதில், அவரது வீட்டில் கடைக்குட்டியாக பிறந்த இவர் 2 வயதிலே தாயை இழந்தாராம். அதன் பின் அக்கா வீட்டில் இருந்து படித்து வந்த அவருக்கு ஒழுங்கான சாப்பாடு, துணி இல்லாததால் ஸ்கூலில் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளாராம். ஏன் அவமானத்தால் ஒரு தடவை சாகலாம் என்று நினைத்துள்ளாராம்.

பிக்பாஸ் 7ல் டபுள் மடங்காக சம்பளத்தை கூட்டிய உலகநாயகன்.., யாத்தே.., இத்தனை கோடியா? பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

அதன் பின்  ஸ்கூலுக்கு போவதை நிறுத்தி விட்டு அக்காவுக்கு ஒத்தாசையாக இருந்து காலத்தை ஓடிவந்த அவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டாராம். அதன் பின்னர் சந்தோஷமாக வாழ்க்கை கடத்தி வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய கணவர் இறந்து போக என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாராம்.அந்த சமயத்தில் நடிகர் சூர்யா தான் உதவி செய்தார் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here