தனியார் பேருந்துக்கு ரூ.2000 அபராதம்.., போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0

மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய பகுதியான செஞ்சி நான்கு முனை சந்திப்பில் எப்போதுமே நெரிசல் மிகுந்து காணப்படும். மேலும் திருவண்ணாமலை to சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வழியே சென்று வரும்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தனியார் பேருந்து பயணிகளை இறக்கி ஏற்ற இப்பகுதியில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து ஆய்வாளர் அப்பண்ட்ராஜ் பலமுறை எச்சரித்தும் பேருந்து ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார்.

மறைந்த பாடகி வாணி ஜெயராம்., காவல்துறை மரியாதையுடன் இறுதி ஊர்வலம்.., முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!!

இதனால் தனியார் பேருந்துக்கு ரூ.2000 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி விட்டார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விபத்தை தடுக்கும் விதமாக தான் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார் என சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here