தமிழகத்தில் விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – ரயில்வேதுறை மேலாளர் தகவல்!!

0

சுகாதாரத்துறை மற்றும் மத்திய ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று தமிழகத்தில் விரைவில் ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென் தமிழக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

பயணிகள் ரயில் சேவை இயக்கம்

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஈரோடு ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் முன்பதிவு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் மற்ற ரயில்வே அலுவலர்கள் உடன் இருந்தனர். ஈரோடு ரயில் நிலைய வளாகத்தின் முன் இருந்த மாதிரி ரயிலை பார்வையிட்ட அவர் சரக்கு ரயில் பெட்டிகளை பிரிக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் ரயில் என்ஜினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

‘பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியேறியது வருத்தமில்லை’ – இளையராஜா விளக்கம்!!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பொது மேலாளர், ‘ஆண்டு தோறும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்வது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு நடைபெறுகிறது. இன்று காலை துவங்கிய ஆய்வுப்பணிகள் இன்று மாலையில் திருச்சியில் முடிவு பெறுகிறது. மேலும் ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து மூன்று மாதத்துக்குள் காலியான இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய ரயில்வே துறை மற்றும் சுகாதாரத் துறையிடமிருந்து உரிய அனுமதி பெற்று விரைவில் பயணிகள் ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here