பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த பிரபலம் – அதுவும் கயல் பாப்பாவுடனா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடித்த ஒரு பிரபலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. மேலும் இந்த அளவிற்கு ஒற்றுமையுடன் குடும்பத்தில் வாழ முடியுமா என்பது இந்த சீரியல் மூலமே உணர முடிந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் எப்பொழுதுமே சந்தோசத்தை காட்டாமல் வீட்டில் சராசரியாக நடக்கும் பிரச்சனைகளும் இதில் காட்டப்பட்டிருக்கும். மேலும் ஒரு பெண்ணாய் தனம் தன் சந்தோசங்களை இழந்து தம்பிகளுக்காக இத்தனை நாட்கள் விட்டு கொடுத்து சென்றதும் பாராட்ட கூடிய விஷயமாகும்.

இதனால் தான் மக்களுக்கு இந்த சீரியல் பிடித்து போனது. ஒரு எதிர்மறையான கருத்துக்களை பரப்பாமல் இந்த சீரியலை பார்த்தால் ஒரு பாசிட்டிவாக ஓரு எண்ணமே மேலோங்கும். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த சித்ரா, நெல்லை சிவா போன்றோர் உயிரிழந்தது பலரையும் சோகமாக்கியது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் நெல்லை சிவாவை வம்பிழுத்து கொண்டே வேலை பார்த்தவர் தான் கணேஷ். இவர் நீண்ட நாட்களாக சீரியலில் காட்டப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது கயல் பாப்பாவை இவர் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here