பாகிஸ்தானுக்கு வந்த சோகம்: வாடகைக்கு விடப்படும் பிரதமரின் இல்லம்!!

0

சர்வதேச நாடுகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பது FATF (Financial Action Task Force) எனப்படும்  பணிக்குழு.  இந்த பணிக்குழு தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கருப்பு பட்டியல், கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது. இந்த இரு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காது.

தற்போது இந்த கிரே பட்டியலில் பாகிஸ்தான் அரசு உள்ளது. இவ்வாறு கிரே பட்டியலில் இருக்கும் நாடுகள் எந்த நேரத்திலும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம். ஏற்கனவே தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் முன்னேற்றம் காட்ட வேண்டும் என FATF பாகிஸ்தான் அரசை எச்சரித்தது.

கடந்த வருடத்தில் இருந்தே பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகளிடம் நிதியுதவி கேட்டும் பாகிஸ்தான் அரசு நிதியுதவி அளிக்க எந்த நாடும் தயாராகவில்லை. தற்போது நிதி நெருக்கடி மேலும் அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தான் ராணுவம் தங்களது பட்ஜெட்டையும் குறைத்து கொண்டது.

தற்போது அரசின் செலவுகளை குறைப்பதற்காக மிக ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமர் இம்ரான் கானும் ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. இவர்களின் இல்லங்களை  கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்படும் என அந்நாட்டு அரசு தற்போது தெரிவித்துள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here