தன் குழந்தையின் உச்சி முகர்ந்த புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்… நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் தனது ஆண் குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டு குழந்தையின் பெயரை அறிவித்து உள்ளார். அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலங்கள் பலர் வெள்ளித்திரையில் சாதித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவர் பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரையிலேயே பல சாதனைகளை படைத்தவர். அங்கே தன்னுடைய காமெடி மூலம் தனக்கென ஒரு ரசிகர்களை சேர்த்து கொண்டவர். இந்நிலையில் இவருக்கு திரையில் நுழைய ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதாவது மெரினா படத்தில் ஓவியாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு வெற்றியை தேடி தந்தது. அதன் பிறகு அவர் தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்தார். அந்த படம் சொல்ல முடியாத அளவு வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த பட வாய்ப்புகள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரையில் தன்னை ஒரு முன்னணி நடிகராக மாற்றிக்கொண்டார்.

மேலும் இவர் நடிப்போடு மட்டுமல்லாமல் பாடல், தயாரிப்பு, பாடலாசிரியர் உள்ளிட்ட பல திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இவர் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

இந்நிலையில் இவர் மனைவி ஆர்த்தி சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளார். இதனையடுத்து ஒரு சில நாட்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவரின் ஆண் குழந்தை புகைப்படத்தை முதன் முறையாக இணையத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அவருக்கு குகன் தாஸ் என்ற பெயரையும் சூட்டி உள்ளதாக தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here