ஆம்னி பேருந்து கட்டணங்கள் இரு மடங்காக உயர்வு – உரிமையாளர்கள் சங்கம் முடிவு..!

0
Private Bus
Private Bus

தமிழநாட்டில் ஊரடங்கிற்கு பிறகு பஸ் போன்ற பொதுப் போக்குவரத்துகள் தொடங்கப்பட உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இரு மடங்கு கட்டணம்:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் மே 17 உடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால் தொழில் துறைகள் சற்று செயல்பட தொடங்கி உள்ளன. மே 17க்கு பிறகு நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு விதிமுறைகளுடன் பொதுப் போக்குவரத்து தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பேருந்துகளில் தனி மனித இடைவெளி உள்ளிட்ட காரணத்தால் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டும் அனுமதித்தால் பல மடங்கு நஷ்டம் ஏற்படும்.

இந்த காரணத்தால் ஆம்னி பேருந்துகளில் பயணக்கட்டணத்தை இரு மடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 1.60 என இருந்த கட்டணம் ரூ. 3.20 ஆக உயர்த்தப்பட உள்ளது. ஊரடங்கு முடிந்து பொது பஸ் போக்குவரத்து தொடங்கிய உடன் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here