தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம்? – முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை என்ன?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம்? - முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை என்ன?

அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களின் அறிவிப்பை விடுத்துள்ளனர்.

பல்வேறு போராட்டங்கள்:

இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசாங்க துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கால காலமாக ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கத்தில் ஒன்று. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர்.

pension

இதையடுத்து, பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் ஒன்றாக சேர்ந்து தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் எந்த நடவடிக்கை அரசாங்கம் எடுக்காததால் இந்த மாதத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்று CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

அதாவது, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது வரை இந்த திட்டம் நிலுவையில் தான் இருக்கிறது. இதனால் கடந்த மாதம் கூட சென்னையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் தமிழகத்தில் 09.09.2022 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு முன் செப்டம்பர் 05, 06, 07, 08 ஆகிய தேதிகளில் போராட்டத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் இயக்கத்தில் சேர விரும்பும் ஆதரவாளர்களுக்கு கடிதம் அனுப்புவது போன்ற பணிகளும் நடைபெறும் என்றும் CPS ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here