மத்திய அரசின் இந்த திட்டத்தில் இணைந்துள்ளீர்களா? அப்போ பம்பர் ஜாக்பாட் – முழு விவரம் உள்ளே!!

0

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 12வது தவணைக்கான 2000 ரூபாய் விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது.

பெயரை சரிபார்க்கும் முறை:

கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா. தகுதியான மக்களுக்கு இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.2000 என மூன்று தவணை முறைகளில் செலுப்படுகிறது. தற்போது வரை 11 தவணைகள் முடிந்த நிலையில் மக்கள் 12-வது தவணைக்காக காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் 12வது தவணைக்கான பட்டியலில் தங்கள் பெயரை உறுதிப்படுத்துவது அவசியம். பட்டியலில் உள்ள பயனாளியின் பெயரை சரிபார்க்கும் முறைக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, முதலில், PM Kisan Yojana – https://pmkisan.gov.in என்ற இணையத்திற்கு சென்று அதில் உள்ள ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்யவும். இதனை தொடர்ந்து கீழ் பட்டியலில் இருக்கும் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் ஆகியவற்றை பதிவு செய்த பின் ‘Get Report’ என்ற பட்டனை கிளிக் செய்தால் பயனாளியின் முழு விவரம் கிடைக்கும். அதில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here