மீனாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு இடிய போகுது.., கதிருக்கு ஆர்டர் குவிய போகுது – ட்விஸ்ட் அடிக்கும் கதைக்களம்!

0
padian stores

அண்ணன் தம்பியென பாசத்தில் நிறைந்து வாழ்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது மீனா செய்த காரியத்தால் சின்னா பின்னமாகிருச்சு. இப்படி கலகத்தை உண்டாக்குறதுக்குனே இருக்கும் ஒரே கேரக்டர் ஜீவா மனைவி மீனா மட்டும் தான். ஆரம்பத்துல இருந்தே குடும்பத்த விட்டு ஜீவாவை தனியா கூட்டிட்டு போனுங்குறதுல உறுதியா இருந்த மீனா கடைசில வீட்ட மாத்தணும்னு சொல்ற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கப்போ நேத்து எபிசோடில் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் மீனா மோமோஸ் செஞ்சி கொடுத்து சாப்பிட வைக்கிறார். இத சாப்பிட்டு மூர்த்தி என்னமா இது கொழுக்கட்டை மாரி இருக்கு. ரொம்ப அருமையா இருக்கேன்னு சொல்கிறார். அதுக்கு மீனாவும்,மாமா இது கொழுக்கட்டை இல்ல,மோமோஸ். நல்லா இருக்கா? அப்டினு எல்லார்ட்டையும் கேட்கிறார். கண்ணனும், ஐசுவும் ரொம்ப சூப்பர்ரா இருக்குனு சொல்ல, ஜீவா எல்லாரும் உண்மையாத்தான் சொல்றாங்களா என திருதிருனு முழிக்கிறார்.

உடனே மீனா, ஜீவாவை பார்த்து நீயும் சாப்பிடுடான்னு சொல்ல, ஜீவாவும் சாப்பிட்டு நல்ல இருக்குனு சொல்றாரு. இந்த பக்கம் கதிருக்கு ஒரு ஆர்டர் பத்தின கால் வருது. அப்போ அவங்க கிட்ட எல்லாமே நாங்க கை பக்குவத்துல பாத்து சமைக்குறோம் அப்டினு கதிர் சொல்கிறார். எல்லாத்துக்கும் கஸ்டமர் சரின்னு சொல்லி போனை வைக்கிறார். இத பத்தி கதிர், முல்லைக்கிட்ட சொன்னவுடன் அவரும் ஆர்டர் கிடைச்சா ரொம்பா நல்ல இருக்கும்னு சொல்லி சந்தோசப்படுகிறார்.

வீட்டையே பார்லர்ரா மாத்துன ஐஸ்வர்யாவும் தனம் அந்நிய வச்சு ரிப்பன் கட் பண்ணி ஸ்டார்ட் செய்கிறார். முதல் மேக்கப் தானம் அம்மாவுக்கும், கஸ்தூரிக்கும் ஐசு போட்டு கொண்டிருக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்குறதுக்காக மூர்த்தியை பார்க்க ஒருத்தர் வருகிறார். வந்தவர், எனக்கு வீடு வேண்டாம். இடம் மட்டும் தான் வேணும். அதுனால நான் வீட்டை இடிச்சிருவேன். இந்த வீட்டுக்கும், இடத்துக்கும் ரூ.65 லட்சம் கொடுக்க தயாரா இருக்கேனு சொல்வதுடன் எபிசோடு முடிஞ்சிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here