பழைய 2 ரூபாய் நாணயம் வைத்து உள்ளீர்களா ??? அப்போ உங்களுக்கு அடித்தது லாட்டரி!!!

0

நம் தாத்தா பாட்டி காலகட்டத்தில் இருந்த உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மற்ற பழக்க வழக்கங்கள் இப்போது நம்மில் பலரிடம் இருப்பதில்லை. அதே போல் தான் அந்த காலத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களும் இப்போது இல்லை. இப்போது அந்த காயின்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ஈடாக 5 லட்சம் தொகையை தருவதாக Quikr நிறுவனம் இணையத்தில் விளம்பரங்கள் வெளியிட்டு உள்ளது.

பணமதிப்பிழப்பிற்கு பிறகு தற்போது தான் நிலைமை சீராகி வருகிறது. நம்மிடம்  1 ரூபாய்,2 ரூபாய் காயின் இருப்பினும் அதற்கு மதிப்பற்று தான் உள்ளது. இந்நிலையில் தான் Quikr நிறுவனம் ,பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு 5 லட்சம் என்று விளம்பரதை இணையத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் அதில் சில நிபந்தனைகளையும் அறிவித்து உள்ளது,அதாவது காயின் தயாரிப்பு ஆண்டு 1994 ஆகவும் மற்றும் அதன் ஒரு பக்கமும் இந்தியக் கொடி இருந்தால் அந்த நாணயத்திற்கு ரூ.5 லட்சம் என்று தெரிவித்து உள்ளது.

அதுவே இந்தியா சுதந்திரத்திற்கு முன் பயன்பாட்டில் உள்ள நாணயம் மற்றும் அதில் விக்டோரியா மகாராணியின் அவர்களின் படம் பதிக்கப்பட்டிருந்தால் அதனுடைய மதிப்பு ரூ.2 லட்சம் எனவும்,  தயாரிப்பு ஆண்டு 1918 மற்றும் இன்னொரு பக்கத்தில் பிரிட்டிஷ் கிங் ஜார்ஜ் V புகைப்படம் இருந்தால் அதற்கு ரூ.9 லட்சம் எனவும்  மதிப்பிட்டு உள்ளது. இதனை பெற முதலில் Quikr-ல் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இது விற்பவர் மற்றும் வாங்குபவர் நேரடியாக சார்ந்தது.

மேலும் Coinbazzar வலைதளம்,இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, அதாவது 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 25,000 தருகிறது. அந்த 10ரூபாய் ஒரு பக்கம் அசோக தூண் மற்றும் மறுபக்கம் ஒரு படகு இருக்க வேண்டும்.இது 1943ம்  ஆண்டு தயாரிப்பட்டிருக்க வேண்டும்.அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.டி. தேஷ்முக் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். மேலும் அதன் இரு முனைகளிலும் 10 ரூபாய் என ஆங்கில மொழியில் பின்புறத்தில் எழுதியிருக்க வேண்டும்.இப்படி பட்ட 10 ரூபாய்  நோட்டை Coinbazza தளத்தில் விற்கலாம் என தெரிவித்து உள்ளது.இந்த நாணயம் மற்றும் 10 ரூபாய்  மதிப்புகள்  வாங்குபவர் மற்றும் விற்பவரை சார்ந்ததே  என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here