இன்ஸ்டாகிராமில் நாசா பதிவிட்ட புகைப்படங்கள்

0

2021 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் கடந்த 10ம் தேதி அன்று நிகழ்ந்தது. தற்போது நாசா வீண்மீன் நிகழ்வின் அரிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் செம வைரலாக இருந்து வருகிறது.

சூரிய கிரகணம்:

கடந்த ஜூன் 10ம் தேதி அன்று இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் நிகழ்வு ஏற்பட்டது. இந்த கிரகணம்  வடக்கு ஐரோப்பா, வடகிழக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள லடாக், அருணாச்சல பிரதேச பகுதிகளில் காணப்பட்டது. சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு நடுவே வருவதை தான் சந்திர கிரகணம் என்று நாம் அழைத்து வருகிறோம்.

தற்போது இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் சில தகவலை பகிர்ந்துள்ளார். அவர்கள் கூறியதாவது, சந்திரன் பூமிக்கு தொலைதூர இடத்திற்கு அருகே இருக்கும் பொழுது ஒரு நெருப்பு வளையம் ஏற்படும் அல்லது வருடாந்திர கிரகணம் ஏற்படுகிறது. மேலும் கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை விட சிறியதாக காட்சிஅளிக்கும் என்றும் இந்த நெருப்பு வளையம் கிரீன்லாந்து, ரஷ்யா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டும் தெரியும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்திரகிரகணத்தின் புகைப்படங்களை நாசா வெளியீட்டு வரும். தற்போது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணத்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here