ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 உடல்கள்., எய்ம்ஸ் மருத்துவமனை எடுத்த அதிரடி முடிவு!!

0
ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 உடல்கள்., எய்ம்ஸ் மருத்துவமனை எடுத்த அதிரடி முடிவு!!
ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 உடல்கள்., எய்ம்ஸ் மருத்துவமனை எடுத்த அதிரடி முடிவு!!

ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 1000 பேருக்கு மேல் படுகாயம் அடைந்தனர். 291 பேர் உயிரிழந்திருந்தனர். இதன் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் அதில் உயிரிழந்தவர்களில் 28 பேர்களின் உடலை வாங்க இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை. மேலும் 3 மாதமாக அவர்களின் உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இவர்களின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரின் மாநகராட்சியிடம் ஒப்படைக்க உள்ளது. மேலும் அவர்களின் உறவினர்கள் பிற்காலத்தில் தேடி வந்தால் அவர்கள் குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சியிடம் ஒப்படைக்க உள்ளது. அதன்படி நாளை இந்த 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் தகனம் செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 5 மாநிலங்களில் நவம்பர் மாதம் “சட்டமன்ற தேர்தல்”., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here