உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!

0
உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!
உலக கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்?? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில்  நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி போட்டியை எதிர்நோக்கி அரங்கேறுகிறது. இந்த தொடரின், லீக் சுற்று போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஓர் இடத்திற்கு 3 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதில், நியூசிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 10 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 8 போட்டிகள் முடிவில் 8 புள்ளிகள் பெற்றுள்ளதால், இந்த அணிகள் தங்களது கடைசி போட்டியை வென்றால் அரையிறுதிக்கு முன்னேறும் அணியை ரன்ரேட் அடிப்படையிலேயே தேர்வு செய்ய இயலும். இதில், பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக வென்று அரையிறுதி செல்ல, இந்த 5 வழிகள் மட்டுமே உள்ளது. இதில், ஏதேனும் நடந்து பாகிஸ்தான் வெற்றி பெற்றால், இந்திய அணிக்கு எதிராக இந்த உலக கோப்பையில் மீண்டும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்த சேவை கட்டணம் 3 மடங்கு உயர்வு., வெளியான ஷாக்கிங் நியூஸ்., அதிர்ச்சியில் பயணிகள்!!!

அதாவது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து,

  • 300 ரன்களுக்கு மேல் எடுத்து, இங்கிலாந்து அணியை 50 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். (அல்லது)
  • 350 ரன்களுக்கு மேல் எடுத்து, இங்கிலாந்து அணியை 63 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். (அல்லது)
  • 400 ரன்களுக்கு மேல் எடுத்து, இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். (அல்லது)
  • 450 ரன்களுக்கு மேல் எடுத்து, இங்கிலாந்து அணியை 162 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். (அல்லது)
  • 500 ரன்களுக்கு மேல் எடுத்து, இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here