தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

0
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.., வெளிவந்த முக்கிய செய்தி!!
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.., வெளிவந்த முக்கிய செய்தி!!

உலக செவிலியர்கள் தினம் ஆண்டுதோறும் அனைவராலும் கொண்டாடப்பட்டாலும், அவர்களுக்கான கோரிக்கைகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலக செவிலியர்கள் தினத்தன்று செவிலியர்கள் 9 கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எவ்வளவு வேதனைக்கு உள்ளாகி இருப்பார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இந்த தி.மு.க. அரசு தற்போது வரை செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கிட்டத்தட்ட 13,000 செவிலியர்கள் தேர்ச்சி பெற்றவர்களை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்றும், பின்னர் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னது.., ஜெயிலர் படம் சிவகார்த்திகேயன் அப்பாவோட கதையா? இது என்னடா புதுசா இருக்கு ?

ஆனால் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் அரசாங்கம் கொடுக்கும் மகப்பேறு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு, இதர படிகள் என எந்த சலுகையையும் அனுபவிக்க முடியாமல் அல்லல்படுவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இருக்கிறது.

எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, இருண்டு கிடக்கும் அவர்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here