கொரோனாவை எங்கள் பாணியில் விரட்டி கொள்வோம் – தடுப்பூசியை வேறு நாடுகளுக்கு கொடுங்கள்: அதிபரின் சர்ச்சை பேச்சு!

0

சீனா வழங்கி வரும் கொரோனா தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை, அதை பிற நாடுகளுக்கு கொடுங்கள் என்ற வட கொரிய அதிபரின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தடுப்பூசி தேவையில்லை:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிரான ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது.  இதிலும், இந்தியாவின் கோவாசின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசியும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி  என்ற தடுப்பூசியும், அமெரிக்காவின் மடர்னா மற்றும் ஸ்பைசர் போன்ற தடுப்பூசிகளும் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

ஒரு சில நாடுகள் தங்கள் தேவை போக, பிற நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.  இந்த நிலையில், வட கொரிய  அதிபர் கிம் ஜாங் உன் சீன நாடு வழங்கி வரும் தடுப்பூசி குறித்து கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பே வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் ஒரு மர்ம முடிச்சாகவே இருந்து வந்தது.

இதையடுத்து, அவர் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அவர் சீனா அரசு வழங்கி வரும் தடுப்பூசி குறித்த ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எங்களுக்கு உண்டான தனி பாணியில் கொரோனாவை நாங்கள் விரட்டி கொள்வோம், உங்கள் தடுப்பூசிகளை தேவைப்படும் பிற நாடுகளுக்கு கொடுத்து கொள்ளுங்கள்.

எங்களுக்கு தேவையில்லை என்று கூறி  சீனா கொடுத்த 30 லட்சம் தடுப்பூசிகளை ஏற்க மறுத்து விட்டார்.  மேலும், இவர் அதிபராக உள்ள வட கொரியாவில், கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் இதுவரை எந்த விதத்திலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here