தாலிபான் ஆட்சியில் நடந்த முதல் கிரிக்கெட் போட்டி – அரங்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!!

0

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு  முதல்  கிரிக்கெட் போட்டியானது  நடந்தது. மேலும் இதனை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டது ஆச்சர்யப்படும் விதமாக அமைந்தது.

தாலிபான்களின் முதல் கிரிக்கெட் போட்டி:

பல ஆண்டுகள் போருக்கு பிறகு தற்போது தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். தாலிபான்கள்  ஆட்சியை  பிடித்த பிறகு மக்கள் அனைவரும் பயந்து கூட்டம் கூட்டமாக வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் சென்றனர். இதனை அறிந்த தாலிபான்கள் எங்களின் ஆட்சியில் எந்தவித துயரங்களும் இருக்காது என்றும், மேலும் பெண்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த உறுதிமொழியை உலகமுழுவதும் உள்ள மக்கள் நம்ப மறுத்த நிலையில் அதனை வெளிக்காட்டும் விதமாக தற்போது கிரிக்கெட் போட்டியினை தாலிபான் ஆட்சியில் முதல் முறையாக  தலைநகரான காபூலில் ஆப்கானிஸ்தான் நடத்தியுள்ளது. இந்த போட்டியானது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பீஸ் டிபண்டர்ஸ் மற்றும் பீஸ் ஹீரோஸ் என்ற இவ்விரு அணிகளும் மோதினர்.

இதில் ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியையும், தாலிபான்கள் கொடியையும் கையில் வைத்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தேசிய ஒற்றுமையை காட்டுவதாக விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனரா என்பது போன்ற  விவரங்களை வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here