இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கிட்டிங்களா?? – அப்போ உங்களுக்கு இது தேவையில்லை – விமான நிலையம் அதிரடி அறிவிப்பு!!!

0

கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்ட உள்நாட்டு விமான பயணிகள் மும்பை விமான நிலையத்திற்குள் வரும்போது நெகட்டிவ் RT-PCR அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அதிரடி அறிவிப்பை மும்பை விமான நிலையம் தற்போது விடுத்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிப்பதால் தொற்று குறையும் என்பதால் அரசு விமான பயணிகளுக்கு பல்வேறு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை அறிவித்தது. பயணிகள் அரசு விதிமுனைகளை பின்பற்றவில்லை என்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு அரசு, மும்பைக்கு உள்நாட்டு விமானங்களில் வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் நேரத்தில் நெகட்டிவ் RT-PCR சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது. தற்போது, மும்பை விமான நிலையம், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட உள்நாட்டு பயணிகள் மும்பை விமான நிலையத்திற்குள் நுழையும் போது RT-PCR அறிக்கைகளை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here