தமிழக செவிலியர்களுக்கு ஷாக் நியூஸ்.., உங்களுக்கு பணி நிரந்தரம் இல்லையா.., அரசு முடிவு!!

0
தமிழக செவிலியர்களுக்கு ஷாக் நியூஸ்.., உங்களுக்கு பணி நிரந்தரம் இல்லையா.., அரசு முடிவு!!
தமிழக செவிலியர்களுக்கு ஷாக் நியூஸ்.., உங்களுக்கு பணி நிரந்தரம் இல்லையா.., அரசு முடிவு!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிகரித்த கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. மேலும் இந்த தொற்றால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் மருத்துவமனைகளில் போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தால் மத்திய அரசு வேகமாக செயல்பட்டு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த முறையில் செவிலியர்களை சேர்த்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் அவர்களுக்கு மாத ஊதியமாக 14,000 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காலங்களில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்தது. இதனால் செவிலியர்கள் தங்களது பணிக்காலத்தை நீடிக்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் செவிலியர்களின் பணிக்காலத்தை நீட்டிக்க முடியாது என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.12.2022) – முழு விவரம் உள்ளே!!

இதற்கு மருத்துவப்பணியாளர் செவிலியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் செவிலியர்களை நீக்க தமிழக சுகாதாரத்துறை எடுத்திருக்கும் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here