நவம்பர் 4, 5ம் தேதிகளில் மதுரை, தேனியில் கன மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0

மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 4, 5ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேக மூட்டம்

வட கிழக்கு மழை, தமிழகத்தில் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில்,’ தமிழக கடற்கரையோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.

தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியத்தை ஒட்டி இருக்கும்.

கன மழை

அடுத்த 48 மணி நேரத்தில், பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரியில் மழை

அடுத்த 72 மணி நேரத்தில், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில் ) : அதிகபட்சமாக மஞ்சளாறு (தேனி ) 9, குறைந்தபட்சமாக உத்தமபாளையம் (தேனி ) 4. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here