நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.., இந்திய அணிக்கு கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!!

0

நியூசிலாந்து A அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய A அணியை BCCI தற்போது அறிவித்துள்ளது.

நியூசிலாந்து A VS இந்திய A:

இந்திய A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து A அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை BCCI வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி , குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ருதுராஜ் IPL தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியா ஏ ஒரு நாள் அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன், wk), பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், KS பாரத் (Wk), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென் , ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் பாவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here