தமிழகத்தில் நாளை (செப். 17) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் நாளை (செப். 17) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை (செப். 17) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!தமிழகத்தில் நாளை (செப். 17) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!

தமிழகத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நாட்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் தவறாது நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம், ஏராளமான வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில் நாளை (செப். 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளன.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

மேலும் 5ஆம் வகுப்பு முதல் டிகிரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி தகுதி பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வருவோர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here