அடுத்த தலைவலி.. சீனாவில் தோன்றிய புதிய வைரஸ்.. மருத்துவர் உயிரிழப்பு!

0

சீனாவில் குரங்குகளை பாதிக்கும் Monkey B வைரஸ் தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த குரங்குகளை பரிசோதித்ததால் அந்த மருத்துவருக்கு வைரஸ் பாதிப்புக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வுகான் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்று மெல்ல மெல்ல உலகத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் பரவி தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. அதுவும் இந்த கொரோனா தோற்று முதல், இரண்டாம், மூன்றாம் அலை என அலை அலையாக ஏற்படுகிறது. தற்போது வரை சர்வதேச நாடுகளால் கூட இந்நோய் தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை.

தற்போது அதே சீனாவில் இருந்து புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குரங்குகளைத் தாக்கும் Monkey B என்ற வைரஸ் தொற்று மருத்துவரை ஒருவரை ஒருவரை தாக்கி உயிரிழக்க செய்துள்ளது. இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்நோய் தொற்றால் உயிரிழந்த குரங்கை சோதிக்கும் போது அவருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார்.

இந்த Monkey B வைரஸ் மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு H10N3 பறவை காய்ச்சல் சென்ற ஆண்டு மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here