தினமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் எந்த வித மாற்றமின்றி அதே விலையில் தொடர்ந்து நீடிக்கிறது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் கடுமையான விலை உயர்வை எதிர்கொண்டு வருகின்றன. மேலும் அவற்றின் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கொரோனா ஊரடங்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித கருணையும் காட்டாமல் சரசரவென உயர்ந்துவிட்டது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 7ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.96க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.79.72க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அது கிட்டத்தட்ட 15 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் சிறிதும் மாற்றமின்றி அதே விலையில் தொடர்ந்து விற்கப்படுகிறது. அதன் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்