ஆட்டோ ஓட்டுனர்கள் கவனத்திற்கு.., இந்த விதியை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.., மாநில அரசு பிறப்பித்த உத்தரவு!!!

0

தமிழகத்தில் பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பொதுமக்களின் அவரசத்தேவைக்கும், குறைந்த தூரம் செல்வதற்கும் ஆட்டோ தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பொதுமக்களின் எளிய பயணங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோ சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசு விதித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ மற்றும் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் ஆட்டோவில் கம்பிகள், கூடுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.

Beauty Parlour செயல்பட தடை.., உரிமம் விரைவில் ரத்து செய்யப்படும்.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

மேலும் குழந்தைகளின் ஸ்கூல் பேக் வெளியே தொங்க விடுவதை தடுக்க வேண்டும். ஒரு ஆட்டோவில் 5 பள்ளி மாணவர்களுக்கு மேல் ஏற்றக்கூடாது. குறிப்பாக ஆர்டிஓ விதிமுறைகளுக்கு உட்பட்டு, சீருடை அணிந்து தான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விதிமுறைகளை மீறினால் நிச்சயம் ஆட்டோ உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here