ஜல்லிக்கட்டில் பங்குபெற இவ்ளோ ரூல்சா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாடுபிடி வீரர்கள் வேதனை!!!

0
ஜல்லிக்கட்டில் பங்குபெற இவ்ளோ ரூல்சா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாடுபிடி வீரர்கள் வேதனை!!!
ஜல்லிக்கட்டில் பங்குபெற இவ்ளோ ரூல்சா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாடுபிடி வீரர்கள் வேதனை!!!

ஆண்டுதோறும் தை முதல் நாள் தமிழர்களின் கலாச்சாரமான பொங்கல் பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெற இருப்பதால் விளையாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரியப்படுவதால் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன் இம்முறை போட்டி நடைபெற உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(12.01.2023) – முழு விவரம் உள்ளே!!

இதைத்தொடர்ந்து பதிவு செய்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு பகுதிகளில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற முடியும் என திட்டவட்டமாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறியுள்ளார். மேலும் ஒரு போட்டிக்கு குலுக்கல் முறையில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் மாடுபிடி வீரர்கள் வேதனையடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here