தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பூ, பிரபுவுக்கும் தனக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குஷ்பூ பதிவு:
தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தின் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் நடிகை குஷ்பு. இந்த படத்தை தொடர்ந்து, சின்னத்தம்பி என்ற படத்தில் நடித்து தனிப்பெரும் நடிகையாக உயர்ந்தார். இதுவரை டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், பிரபுவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அந்தக் காலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது ஒரு புறம் இருக்க தற்போது பிரபுவை எப்போது, தான் நேரடியாக சந்தித்தேன் என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் நான் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது பிரபு உள்ளே செல்லும் போது என்னை பார்த்து இருக்கிறார்.
ஐயோ.., உங்க வளைவு நெளிவு எங்களை சாவடிக்குது ஷிவானி.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!
ஸ்டுடியோவுக்குள் அவர் சென்றதும், வெளியே இருக்க பொண்ணு இந்தப் படத்துக்கு செட் ஆவாங்க என சொல்லி இருக்கிறார். அப்படி தான் எனக்கு தர்மத்தின் தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்து, எனக்கு வாழ்க்கை கொடுத்ததே, பிரபுதான். அந்த தருணத்தில் தான் எனக்கும் அவருக்குமான சந்திப்பு நிகழ்ந்தது. இதை என்னால் மறக்கவே முடியாது என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.