தமிழக பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு.., பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

0
தமிழக பள்ளி வாகனங்களுக்கு புது கட்டுப்பாடு.., பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி பேருந்துகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பள்ளி பேருந்துகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து பள்ளி வாகனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  • இந்த கல்வியாண்டில் பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.
  • பள்ளி வாகன ஓட்டுனர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்சோ சட்ட விதிகளை பற்றி கூறியிருக்க வேண்டும்.
  • மேலும் வாகன ஓட்டுனர்கள் உதவியாளர்கள் மது அருந்தி உள்ளார்களா என்பதை தினமும் பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
  • இது மட்டுமல்லாமல் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர் உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி நிர்வாகம் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here