திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு புதிய நெறிமுறை., தேவஸ்தான முக்கிய தகவல்!!!

0
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு புதிய நெறிமுறை., தேவஸ்தான முக்கிய தகவல்!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு புதிய நெறிமுறை., தேவஸ்தான முக்கிய தகவல்!!!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் தேவஸ்தானம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில இடைத்தரகர்கள் துணை விசாரணை காரியாலயங்களில் முன்பதிவு செய்து மற்றவர்களிடம் அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 1ம் தேதி Face ரெககனைஷேசன் தொழில்நுட்பத்தை துணை விசாரணை காரியாலயங்கள் அறையில் சோதனை முறையில் வைக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அறையை காலி செய்ய வேண்டும். அப்படி வேறு நபர்களின் முகம் பதிவிடப்பட்டு இருந்தால் முன்பதிவின் போது கட்டப்பட்ட டெபாசிட் தொகை மொத்தமாக முடக்கப்பட்டு விடும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சோதனை முயற்சியால் இடைத்தரகர்களின் ஈடுபாடுகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இனி அடுத்த கட்டமாக பக்தர்கள் தங்கும் விடுதி அறை மற்றும் இலவச தரிசனத்திலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளனர்.

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்த திட்டமா?? வெளியான முக்கிய தகவல்!!!

இதன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அறைக்குள் செல்லும் வகையிலும், பக்தர்கள் ஒரு முறை மட்டுமே ஒரு லட்டை பெறும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை வைத்து விடுதி அறைளை முன்பதிவு செய்த பின் 30 நாட்களுக்கு பிறகே மீண்டும் புக்கிங் செய்ய முடியும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here