வாட்ஸ்அப் மூலம் Chat செய்யாமல் இனி பணம் சம்பாதிக்கலாம் வாங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
வாட்ஸ்அப் மூலம் Chat செய்யாமல் இனி பணம் சம்பாதிக்கலாம் வாங்க.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கேற்ப மெட்டா நிறுவனமும் அடிக்கடி பல புது அம்சங்களை அறிவித்து பயனர்களை வியக்க வைத்து வருகிறது. என்னதான் வாட்ஸ்அப் செயலி மூலம் பல நன்மைகள் இருந்தாலும் அதனால் சில ஆபத்துகள் உள்ளதால் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது இதுவரை வெவ்வேறு அம்சங்களை வெளியிட்ட மெட்டா நிறுவனம் தற்போது youtube போலவே எப்படி வாட்ஸ் அப் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் சம்பாதிக்கும் அம்சம் கூடிய விரைவில் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here