சென்னை மெட்ரோ சேவையின் மூலம் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பயணிகளின் வசதிக்கேற்ப மெட்ரோ நிர்வாகமும் பல புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. அதே போன்று மெட்ரோ ஊழியர்களுக்கும் பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், குடிநீர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் தரப்படுகிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.