உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா., வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் பான் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் பான் கார்டின் மூலம் எந்த ஒரு மோசடிகளும் நடந்து விடக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது உங்களது பான் கார்டை உங்களுக்கு தெரியாமலேயே வேறு ஒருவர் பயன்படுத்தி வந்தால் அதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முதலில் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று “PAN Verify Details” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

பின் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து submit கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களது பான் கார்டு தகவல்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். இதை வைத்து உங்களது பான் கார்டை இதுவரை வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை நீங்கள் எளிதில் கண்டுபிடிக்கலாம். இது மட்டுமல்லாமல் TRACES என்ற போரட்டலுக்கு சென்று உங்களது பான் கார்டின் பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here