தானாகவே ஓடும் படகுகள் – எந்த நாட்டுல இப்படி ஒரு வினோதம்!!!

0

நெதர்லாந்தில் என்ஜினீயர்கள் தங்களது திறமைகளால் தானாக இயங்கும் படகுகளை கண்டுபிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தானாகவே ஓடும் படகுகள்:

நெதர்லாந்தில் காற்று மாசுபடுவதை தவிர்க்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, அந்த வகையில் தற்போது போக்குவரத்து வழிமுறைகளை மாற்றி, கடல்வழி பயணம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, தானியங்கி படகை வடிவமைத்து உள்ளனர். நீர்வழி போக்குவரத்து வழித்தடங்களில் சென்சார்கள் அமைத்து அதனை படகில் உள்ள கணினி அடிப்படையில் இயங்கும் எந்திரத்துடன் இணைத்துள்ளனர். இந்த படகை ரென்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

இதனால் ஓட்டுநர் இல்லாமலேயே ஜி.பி.எஸ். உதவியுடன் படகினை வெற்றிகரமாக இயக்குவதில் நெதர்லாந்து வல்லுநர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த படகுகளில் இருக்கும் சென்சார்களில் இருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் இந்த தானியங்கி படகு இயங்குகிறது. தேவைப்படும் நாடுகளுடன் இத்தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ளவும் நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here