கொரோனா தடுப்பூசியின் புதிய அறிகுறிகள்…விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு இதுவரைக்கும் இல்லாத சில புதிய அறிகுறிகள் வருவதாக  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு தொற்று பற்றிக்கொள்வதாக சில தகவல்கள் வெளிவந்ததையொட்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது என்று  மருத்துவ நிபுணர்கள் கூறி  வருகின்றனர். பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசியை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், ஒப்பந்த அடிப்படையில் தங்கள் நாட்டிலேயே தயாரிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல மக்கள் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களை போட்டுக்கொண்டு உள்ளனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்திய பலருக்கு தொற்று உறுதியானதையடுத்து லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வானது  11 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்டது. அதனடிப்படையில்  முதல் டோஸ் போட்ட 0.2% பேர், 2வது டோஸ் போட்ட 0.3% பேர் தொற்றால் பாதிக்கப்படுவது தெரியவந்து உள்ளது. மேலும் வழக்கமாக பாதித்தவர்களுக்கு ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றதாக இல்லாமல் வித்தியாசமான புதிய 4  அறிகுறிகள் தென்படுகின்றன. அவை தும்மல்,மூச்சு திணறல்,காது இரைச்சல், அக்குளில் வீக்கம் போன்றவைகளாகும். பொதுவாகவே இது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அந்த வீக்கம் தொடர்ந்து இருந்தால் அது  கொரோனா அறிகுறியாக கருதப்படுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here