இந்திய ரூபாயில் நேதாஜி படத்தை அச்சிட மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0

நமது இந்தியா ரூபாயில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகைப்படத்தை வைத்து அச்சிடுமாறு மதுரை ஐகோர்ட் கிளையில் ஒருவர் வழக்களித்துள்ளார். தற்போது இதுகுறித்து ஐகோர்ட் கிளை முடிவெடுத்துள்ள்ளது.

நேதாஜி:

இந்தியர்களால் நேதாஜி என்று அழைக்கப்படுபவர் தான் சுபாஷ் சந்திர போஸ். இவர் சுதந்திர போரட்ட தலைவராவார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாட்டவர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு எதிராக ராணுவத்தை உருவாக்கி அசத்தியவர். மேலும் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். காந்தி அகிம்சை முறையில் போராடினார் என்றால் இவர் வன்முறை முறையில் போராடினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நம் இந்திய ரூபாய்களில் நமது தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் தான் அச்சடித்து வருகிறது. ஆனால் நம் நாடு விடுதலை பெற்றதற்கு காந்தியை போல் நேதாஜியும் ஓர் காரணம் என்று பலர் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் இந்தியா ரூபாயில் நேதாஜியின் படத்தை அச்சடிக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

இந்த வழக்கை ரமேஷ் என்பவர் தொடர்ந்துள்ளார். தற்போது இதுகுறித்து மதுரை நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால், நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here