நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் – சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!

0
நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் - சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!
நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் - சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!

தமிழகத்தில் மத்திய அரசு நடத்தக்கூடிய நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

மசோதா தாக்கல்:

தமிழக சட்டசபை கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிரான புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு, இது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராமலே இருந்து வந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது.

நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் - சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!
நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் – சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!

இந்த நிலையில், தமிழக அரசு இன்று நடந்த சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மேலும், இது குறித்து முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. தற்போது அதை எதிர்க்கும் வகையில் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் - சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!
நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா தாக்கல் – சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய தமிழக அரசு!!

ஆனால், இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்து அனிதா போன்ற பல்வேறு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தவிடு பொடியாக்கியது. தற்போது இறந்த மாணவன் தனுஷின் மரணத்திற்கும் கடந்த அரசு தான் காரணம் என தெரிவித்தார். அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவன், அந்த பயத்தில் தற்கொலை செய்துள்ளான் என குற்றம் சாட்டினார். இந்த நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here