இரட்டை குழந்தை ரகசியத்தை பற்றி தெரிந்துகொள்ளும் வெண்பா – பாரதிக்கு உண்மை தெரிந்தால் சௌந்தர்யாவின் நிலை??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு குழந்தை பற்றிய சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்ல மறுபக்கம் வெண்பாவிற்கும் சந்தேகம் அதிகமாகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவிற்கு துளசியிடம் எதோ பெரிய ரகசியம் இருப்பது போன்று சந்தேகமாகிறது. இதனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் திட்டம் போடுகிறார். கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன் குழந்தையாக இருக்குமோ?? என்ற பதட்டம் இருந்துகொண்டே உள்ளது.

ஒவ்வொரு ஆளாக சென்று கண்ணம்மா தன்னுடைய குழந்தை எங்கே என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் சௌந்தர்யா துளசியை எப்படியோ அலர்ட் செய்ய அவரும் கண்ணம்மாவிடம் பொய் சொல்கிறார். இந்நிலையில் துளசி சௌந்தர்யாவிற்கு கால் செய்து தனக்கு இப்படி செய்தது மிகவும் கஷ்டமாக இருந்ததாக சொல்கிறார்.

சௌந்தர்யாவோ இதை விட்டால் வேறு வழியில்லை என்று கூறுகிறார். அடுத்ததாக வெண்பாவை காட்ட பாரதி சொன்னதையே நினைத்துக்கொண்டுள்ளார். துளசிக்கு சௌந்தர்யாவிற்கும் அப்படி என்ன தான் சம்மந்தம் என்று சொல்கிறார். அவள் வெறும் நர்ஸ் தான், சௌந்தர்யா போய் பேசுற அளவுக்கு ரெண்டு பேருக்கும் என்ன கனெக்சன் என்று யோசிக்கிறார்.

இதனை நேரடியாக சென்று விசாரிப்போம் என்று செல்கிறார். அந்த சமயம் பார்த்து துளசியை பார்க்க கண்ணம்மா மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார். துளசியும் கண்ணம்மாவும் பேசிகொண்டுள்ளனர்.

தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை பற்றி சொல்ல அப்பொழுது பார்த்து வெண்பா அங்கு வர அதை கேட்டு விடுகிறார். கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்ததா?? என்று ஷாக்காகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here