T20 போட்டியில் சாதித்த இந்தியா…, இலங்கைக்கு எதிராக இத்தனை வெற்றிகளா?? முழு விவரம் உள்ளே!!

0
T20 போட்டியில் சாதித்த இந்தியா..., இலங்கைக்கு எதிராக இத்தனை வெற்றிகளா?? முழு விவரம் உள்ளே!!
T20 போட்டியில் சாதித்த இந்தியா..., இலங்கைக்கு எதிராக இத்தனை வெற்றிகளா?? முழு விவரம் உள்ளே!!
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் டி20 போட்டியை வெல்வதன் மூலம் ஒரு சாதனை பட்டியலில் முன்னிலை பெற அதிக வாய்ப்பு உள்ளது.

IND vs SL

இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் வழி நடத்த உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டி நடைபெற இருப்பதற்கு முன்பாக டி20 போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி குறித்த பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில், இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் அதிக முறை (18) வெற்றி பெற்ற அணியாக திகழ்கின்றன.
இந்த பட்டியலில் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக 26 போட்டிகளில் மோதியதில், 17 ல் வெற்றி பெற்றதால் அடுத்த இடத்தில் உள்ளது. இதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் இந்திய அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இலங்கைக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் போட்டியிலும் வென்று, முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here