
கேரளாவில் ஒருவர் பசுவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை:
தற்போதைய காலகட்டத்தில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சில ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். அதில் சில இளம் பிஞ்சுகள் இறந்து விடுகின்றனர். இதை தடுக்க அரசாங்கம் பல சட்டங்கள் கொண்டு வந்தாலும் இது போன்ற தவறுகள் குறைந்த பாடு இல்லை. இப்படி பெண்களை சீரழித்து வந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு மனிதன் பசுவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் என்கிற பகுதியில் இருக்கும் பசு பண்ணையில், இரவு நேரத்தில் பசுக்கள் அலறுகிற சத்தம் கேட்ட பண்ணையின் உரிமையாளர் பார்க்க சென்றார். அந்த வேளையில் மணி என்பவர் சுவரில் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் காவல் துறையிடம் பண்ணை உரிமையாளர் புகார் கொடுக்கப்பட்டதும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை சோதனை போட்ட போது, சுவரில் மணி என்பவர் ஏறி குதித்து ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கலா? கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!
இதை தொடர்ந்து மணியை கைது செய்து காவல்துறை விசாரித்த போது பண்ணையில் இருந்த பசுவுக்கு மணி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அவர் பிற விலங்குகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பாரா என்று காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.