ராகுல் டிராவிட் இடத்திற்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ…, டைம் எல்லாம் குறிச்சாச்சு??

0
ராகுல் டிராவிட் இடத்திற்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ..., டைம் எல்லாம் குறிச்சாச்சு??
ராகுல் டிராவிட் இடத்திற்கு ஆப்பு வைக்கும் பிசிசிஐ..., டைம் எல்லாம் குறிச்சாச்சு??

ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி:

இந்திய அணி கடந்த ஆண்டில் பெரிய அளவிலான தொடர்களை வெல்லாததால், பல முக்கிய முடிவுகளை எடுத்து வந்தது. சமீபத்தில் கூட, பிசிசிஐ கூட்டிய கூட்டத்தில், இனி ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு மட்டுமே கேப்டனாக இருப்பார் என அறிவித்திருந்தது. இதற்கு காரணம், இந்த வருடத்தில், ஒருநாள் உலக கோப்பை தொடரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இரு தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இப்போதே பிசிசிஐயானது இவ்வாறு அறிவித்துள்ளது. ஆனால், இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி வெல்ல வில்லை என்றால், ரோஹித் கேப்டன் பதவியில் இருப்பது கேள்விக்குறிதான். இதே போல, தான் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் நிலைமையும்.

IND vs SL 1st T20 2023: ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா??

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல தவறியதால், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது, பயிற்சியின் கீழும் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை வெல்ல தவறி உள்ளது. இதனால், எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பையை பொறுத்தே ராகுல் டிராவிட் பயிற்சி காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 50 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு, VVS லக்ஷ்மன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here