தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா…, ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த சாதனை!!

0
தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..., ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த சாதனை!!
தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..., ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த சாதனை!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், தோனி சாதனையை முறியடித்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணியானது, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்கள் இருவரும் இணைந்து, முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தனர். இதில், ரோஹித் சர்மா 38 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 34 ரன்கள் அடித்து பிளேர் டிக்னர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர், 34 ரன்களில் வெளியேறினாலும், சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் தோனி மற்றும் யுவராஜின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
அதாவது, சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா 125* சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, தோனி 123 மற்றும் யுவராஜ் சிங் 71 சிக்ஸர்களுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here