இனி திருச்செந்தூர் கோவிலில் செல்போன், ஜீன்ஸ், லெக்கின்ஸுக்கு தடை.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
இனி திருச்செந்தூர் கோவிலில் செல்போன், ஜீன்ஸ், லெக்கின்ஸுக்கு தடை.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இனி திருச்செந்தூர் கோவிலில் செல்போன், ஜீன்ஸ், லெக்கின்ஸுக்கு தடை.., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மதுரைக் கிளை நீதிமன்றம் சில விதிமுறைகளை விதித்துள்ளது.

திருச்செந்தூர் கோவில்:

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பாப்புலர் ஆன வீடு என்றால் அது திருச்செந்தூர் கோவில் தான். இந்த கோவிலுக்கு ஏகப்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கோவிலை தூய்மையாக வைத்துக்கொள்வதில் கோவில் நிர்வாகம் படும் பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரைக் கிளை நீதிமன்றம் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது,

1, கோவில் வளாகத்தில் பக்தர்கள் மட்டுமின்றி அர்ச்சனை செய்யும் பூசாரிகளும் மொபைல் போன் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் காவல் துறையினர் மூலம் பறிக்கப்பட்டு, திரும்ப ஒப்படைக்க கூடாது.

2. கோவில் என்பது மக்கள் சுற்றி பார்க்கும் பார்க் கிடையாது, இங்கு வரும் பொழுது பக்தர்கள் அனைவரும் தமிழ் பண்பாடான, வேஷ்டி, சட்டை, சேலை ஆடைகளில் வர வேண்டும். மேலும் ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ், சார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது.

ட்விட்டரை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவன ஊழியர்களும் பணி நீக்கம்? மெட்டா நிர்வாகத்தின் அதிரடி முடிவு!!

3. திருப்பதி கோவிலில் நுழைவு வாயிலில் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள், ஆனால் இங்கே கோவில் சன்னதிக்குள் சென்று செல்பி எடுக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

இது போன்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here