ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதிரடி., 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் – தொடரும் நடவடிக்கை!!

0
ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதிரடி., 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் - தொடரும் நடவடிக்கை!!

மெட்டாவை  தலைமையிடமாக கொண்ட பேஸ்புக், தங்கள் நிறுவனத்தில் இருந்து 11,000  ஊழியர்களை அதிரடியாக வெளியேற்றியுள்ளது. இது, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணி நீக்கம் :

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. twitter நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் வாங்கிய எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களில் 50% பேரை பணி நீக்கம் செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நடவடிக்கையை தொடர்ந்து, மெட்டா நிர்வாகத்தை தலைமையிடமாகக் கொண்ட பேஸ்புக் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது வருவாய் இழப்பு மற்றும்  நிதி நிலைமையை சரி செய்தல் போன்ற காரணங்களுக்காக  தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தார்.

வேலையில்லா “மகளிர்” கவனத்திற்கு.., மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்.., முழுவிபரம் உள்ளே!!

அதன் அடிப்படையில் இன்று 11,000க்கும் மேற்பட்ட பேஸ்புக் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். தொடரும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளால், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here