MLC: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய மும்பை அணி…, நிக்கோலஸ் அதிரடி சதம் விளாசல்!!

0
MLC: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய மும்பை அணி..., நிக்கோலஸ் அதிரடி சதம் விளாசல்!!
MLC: சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய மும்பை அணி..., நிக்கோலஸ் அதிரடி சதம் விளாசல்!!

அமெரிக்காவில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் வீரர்களுக்கு முதல் சீசனாக மேஜர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் 6 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில், சியாட்டில் ஓர்காஸ் மற்றும் MI நியூ யார்க் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இன்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற MI அணி பவுலிங்கை தேர்வு செய்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, களமிறங்கிய சியாட்டில் ஓர்காஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை குவித்திருந்தது. இதில், அதிகபட்சமாக குயின்டன் டி காக் 87 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 184 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MI அணி நிக்கோலஸ் பூரனின் (137*) அதிரடியான சதத்தால் 16 வது ஓவரிலேயே 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், MI நியூ யார்க் அணி முதல் சீசனை வென்ற சாம்பியன் அணியாக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

IND vs WI: தொடரை வெல்ல போவது யார்?? கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி எது??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here